Header Ads

  • Latest News

    Ad Free YouTube video Guide Tamil

    Ad Free YouTube video Guide Tamil

    Do you get nasty ads while watching YouTube on Android TV, Mi Amazon firetv stick or laptop? There are many ways to watch desired videos without ads. Each one will pop

    ஆண்ட்ராய்டு டிவிலயோ, Mi  அமேசான் firetv stickலயோ அல்லது லேப்டாப்பிலோ,  YouTube பாக்கும்போது நசநசன்னு விளம்பரங்கள் Ad வருதா? விளம்பரங்களே ( Ad Free ) இல்லாமல் விரும்பிய வீடியோக்கள் பார்க்க பல வழிகள் இருக்கு. ஒவ்வொன்னா பாப்போம்.

    Ad Free YouTube video Guide Tamil

    Ad Free YouTube video Guide Tamil
    Ad Free YouTube video Guide Tamil


    விக்ரமன் படங்கள் பாத்துருக்கீங்களா? எந்த படத்தை எடுத்துக்கிட்டாலும் அதுல ஒரு பாட்டை fix பண்ணிப்பாங்க. அந்த பாட்டை ஹீரோ ஒரு தடவை ஹீரோயின் ஒரு தடவை, ஹீரோ ஹீரோயின் சேர்ந்து ஒருதடவைன்னு பாடுவாங்க. மெயின் மெட்டை டைட்டில் கார்ட்ல போட்டுப்பாங்க, அதையே சோக BGMமாவும் போட்டுப்பாங்க. 


    கடைசியா மொத்த கேரக்டர்களும் சேர்ந்து பாடி எண்டு கார்டு போடுவானுக. இதை தான் இப்போ YouTube பண்ணுது. ஆரம்பம் முடிவு மட்டுமில்லாம இஷ்டத்துக்கு இடையிடைல விளம்பரத்தை place பண்ணி பாக்குற அனுபவத்தையே கெடுத்துருது. விளம்பரங்கள் வேணாமா, காசுக்குடுனு அப்பப்போ இளையராஜா அவதாரம் வேற எடுக்குது. 


    உன் ஆணவத்தை அடக்க ஒருத்தன் வருவான்டான்னு நினைக்கும்போதே YouTube பக்கத்துலயே பானிபூரி கடை போட வந்தவன் தான் Smart YouTube TV. அமேசான் firetv, Mi stick, ஆன்ட்ராய்டு டிவியில் YouTube வீடியோ பார்ப்பவர்களுக்கு உண்மையிலேயே இந்த app ஒரு வரகரிசி சாதம் தான்.

    இந்த அப்ளிகேஷன் லிங்க் கடைசியில குடுக்குறேன் டவுன்லோட் பண்ணிக்கோங்க 



    Ad Free YouTube video Guide Tamil
    Ad Free YouTube video Guide Tamil


    இது ஒரு third party app தான், Google PlayStoreல கெடைக்காது. ஆனா github ல கெடைக்கிது. இந்த appப்போட ஸ்பெஷாலிட்டியே தாலிக்கட்டி குடும்பம் நடத்துற Googleலுக்கே தெரியாம YouTubeபை சைட் அடிக்க வைக்கிறது தான் 


    Ad Free YouTube video Guide Tamil
    Ad Free YouTube video Guide Tamil


    சீப்ப ஒழுச்சுவச்சா எப்புடி பாஸ் கல்யாணம் நிக்கும்ன்னா இங்க நிக்கும். Google Servicesசே யூஸ் பண்ண விடலானா எப்புடி அவன் நம்ம details கலெக்ட் பண்ணுவான்? விளம்பரம் குடுப்பான் சொல்லுங்க? Scroll, pop-up, ஆரம்பத்துல, இடைல, முடிவுலன்னு எங்கயும் advt வராது. 


    Official YouTube appல எப்புடி உங்க accountடை sync செய்வீங்களோ அதே போல தான் இந்த appலயும். எப்புடி பொண்ணுங்க பட்டுன்னு கல்யாணம் ஆனதும் அவங்க பாய் பேஸ்டிய கிழட்டிவிடுறாங்களோ அதே மாதிரி 

    ஏதாவது Google account வச்சு appல Login பண்ணினதும் கழட்டி விட்டுடலாம். 


    Smart YouTube TVல PRO Main, PRO Alt, LITE Main, LITE Altன்னு நாலு mode இருக்கு. நெட் ஸ்பீடுக்கு ஏத்த மாதிரி ஏதாவது ஒரு mode செலக்ட் பண்ணி பாக்க ஆரம்பிக்கலாம். இதோட பிளேயர் ரொம்ப தனித்துவமானது. எல்லா controlகளும் ஒரே இடத்துல இருக்குறனால அடிக்கடி settings பக்கம் போக தேவை இல்ல. 


    இதன் settings பக்கம் போய் பாத்தீங்கன்னா எப்பவும் உப்புமாவே போடற பொண்டாட்டி ( எங்க வீட்டுல உப்புமாக்கு தடை போட்டுருக்கேன் ) சம்பள நாள் அன்னைக்கி சிக்கன் சூப் வைக்கிறமாதிரி ஏகப்பட்ட features காட்டும். உதாரணமா app open செய்யும்போதே நீங்க subscribe பண்ணின பக்கங்கள் மட்டும் காட்டுற மாதிரி, Music பேஜ்ல boot ஆகற மாதிரி நெறைய... 


    அடுத்ததா நாம பாக்கப் போறது ஒரு Plug-in. பேரு Magic Actions. பர்சனல்லா எனக்கு ரொம்ப புடிச்சது. சிஸ்டம் யூஸ் பண்ற மீம் கிரேட்டர்னா கண்டிப்பா இந்த Plug-in add பண்ணிக்கோங்க. உங்களுக்கு usualலா கிடைக்கக்கூடிய YouTube viewing அனுபவத்தையே வேற லெவெலுக்கு தரதரன்னு இழுத்துட்டுப் போயிடும்.


    Ad Free YouTube video Guide Tamil
    Ad Free YouTube video Guide Tamil


    Chrome, firefox, Opera போன்ற எந்த பிரௌசர் என்றாலும் பாமக போல் பக்காவாக கூட்டணி அமைக்கக்கூடிய Plug-in இந்த Magic Actions. add செய்து YouTube வெப்சைட்டை ஓபன் செய்த மாத்திரத்தில் வலது மேல் ஓரத்தில் ஒரு ஸ்விட்ச் தோன்றியிருக்கும். அதன்மூலம் black or white modeக்கு மாற்றிக்கொள்ளலாம்


    Ad Free YouTube video Guide Tamil
    Ad Free YouTube video Guide Tamil



    வெட்டுப்புண், சிரங்கு, தேமல், தோல்வியாதி என்று சகலத்துக்கும் உபயோகப்படும் சைபால் போல (அப்ப்பா, விளம்பரப்படுத்தியாச்சு) Ad block, Cinema mode, AutoHD, Full Screen என்ற எல்லாத்தையும் செவ்வனே செய்யும் ஒரே Plug-in இந்த Magic Actions.


    Ad Free YouTube video Guide Tamil
    Ad Free YouTube video Guide Tamil


    இந்த Plug-in அண்ணன் சீமான் மாதிரி. இது இருந்தா கல்யாணசுந்தரம் ராஜிவ் காந்தின்னு எந்த appம் தேவையில்ல.

    YouTube வீடியோகளில் templates எடுக்க யூஸ் பண்றேன். JPEG, PNG ன்னு எந்த format மற்றும் எந்த resolutionலயும் டக்குன்னு SS எடுக்கலாம் 


    இந்த அப்ளிகேஷன் யூஸ் பண்ணி Ad Free YouTube videoவ பாருங்க. அடுத்த பதிவுல மொபைல்ல YouTube பாக்கும்போது Ad மேல கால் வைக்காம எப்புடி தவ்விப்போயி வீடீயோஸ் பாக்குறதுன்னு விரிவா பாப்போம். நன்றி.


    You have to wait 15 seconds.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad