Free IPL live tv apps for firestick and mobile [ Tamil ]
Free IPL live tv apps for firestick and mobile [ Tamil ]
செலவில்லாம 1000+ சேனல்களை
HD/4K தரத்துல
பார்க்கணுமா? அப்ப
மேற்கொண்டு படிங்க.
1990 தொடக்கத்திலிருந்து கிட்டத்தட்ட பதினஞ்சு
வருசத்துக்கு மேல கேபிள் டிவி மோனோபோலியா கோலோச்சிட்டுருந்ததுக்கு அப்புறம்
சாவகாசமா வந்து சேர்ந்தது தான் DTH. ஆரம்பத்துல Installation
charges குடுத்தது போக
மாசாமாசம் ஒரு குறிப்பிட்ட தொகை சந்தாவாக குறுத்துட்டு இருக்குறது பத்தி
அலட்டிக்கல
காரணம் கேபிள் டிவியை விட மேம்பட்ட தரத்துல சேனல்கள் தெரியுறதுனால கூட
இருக்கலாம். போக DTHல டிவி பார்ப்பது ஒரு சில வீடுகள்ல ஒரு
கவுரவமாக வேற பார்க்கப்படுது.
DTH நெனச்சதுபடி எல்லாம் சுமூகமா
போய்க்கொண்டிருக்கும் போது திடீரன்னு TRAI ஒரு குண்ட தூக்கிப் போடுது. அதாவது சமீபத்திய Regulation படி சந்தாதாரர்களே தங்களுக்கான சேனல்களை தேர்வு செய்ய
அறிவுறுத்தப்படறாங்க.
இந்த நடைமுறை சந்தாதாரர்களுக்கு சாதகமானதாகத் தெரிந்தாலும் ஏற்கனவே
அந்தந்த DTH/கேபிள் டிவிகாரர்களுக்கு
செலுத்திக்கொண்டிருக்கும் மாத சந்தாவைவிட கூடுதலா பணம் செலுத்தும் சூழலே தற்போது
வரை நிலவுது.
இங்கதான் கடைசியா வந்து சேர்றாரு விநாயக் மஹாதேவ். அதாவது நம்ம Android box. கேபிள் டிவி Eraல DTH போட்ட அசுர பாய்ச்சல் மாதிரி இல்லாம கொஞ்சம்
ஸ்லோ மோஷன்ல தான் Android box இப்போ வராப்ள. காரணம், விளம்பரமின்மை மற்றும் Unlimited Internet
requirement.
free IPL live tv apps for firestick and mobile [ Tamil ] |
ஒகே, விசயத்துக்கு வருவோம். Android boxன்னா என்ன? இது எப்புடி Conventional
கேபிள் டிவி/DTHலருந்து வேறுபடுது?
இது முழுக்கமுழுக்க இன்டர்நெட் connectivityல் இயங்கக்கூடிய ஒரு கருவி. இப்போ உங்க
வீடுகள்ல வெறும் 5MBPS வேகம் கொண்ட Broadband
அல்லது WiFi connection இருந்தா போதும். HD அல்லது 4K தரத்துல அட்டகாசமான டிவி சேனல்கள் கண்டு
ரசிக்கலாம், அதுவும் ஒரு பைசா செலவில்லாம.
அதுக்கு செய்யவேண்டியதுலாம் மேல சொன்ன ஏதாவது ஒன்னை வாங்கினா போதும். Branded தான் வேணும்னா Amazon fireTV stick/ Chromecast அல்லது Airtel
XStream வாங்கலாம்.
Branded stick வாங்கும் பட்சத்தில் Alexa அல்லது Google Assistant சேவைகளும் IR சென்சார் இல்லாத இன்டர்நெட் வாயிலாகவே
இயங்கும் ரிமோட் எஸ்ட்ராவாக கிடைக்கும். இந்த மூன்று deviceமே 8GB Internal memory, 1GB RAM Spec கொண்டவை. சரியான offerகளில் வாங்கினால் 3000 ரூபாய்குள் வாங்கிவிடலாம்.
மார்க்கெட்டில் கிடைக்கும் சில Brand
அல்லாத Android Boxகள் அதே மூவாயிரத்திற்கு 4GB
RAM, 64 GB Internal memoryகளில் கிடைக்கிறது. ஆனால் ரிமோட்கள் பாடாவதிகளாக வாய்ப்பதுண்டு. பார்த்து
வாங்கணும். Brandedனாலும் இதுவானாலும் எல்லாம் சீனாவிலிருந்து
தான் தருவிறக்கப்படுகிறது.
உங்கள் விருப்பப்படி எந்த box/fireTV
stick வாங்கினாலும் HDMI போர்ட் மூலம் உங்கள் டிவியில் இணைத்துக்கொள்ளலாம். இணைத்த மாத்திரத்தில்
உங்கள் சாதா டிவி ஸ்மார்ட் டிவியாக உருமாறி மிடி போட்ட மஹாலக்ஷ்மியாக காட்சிதரும்.
பரஸ்பர குசல விசாரிப்புகளான Name,
Email, Preferences குடுத்தப்பின் Branded stickகளில் Netflix,
Amazon Prime, YouTube, Zee5, Hotstar போன்ற சில Preloaded
appகளை காணலாம்.
ஏற்கனவே அந்தந்த appகளோடு தங்களுக்கு பேச்சுவார்த்தை இருப்பின் Login credentialகளை உள்ளீட்டு பார்க்க ஆரம்பிக்கலாம்.
இருக்கிறதே தம்மாத்துண்டு துண்டிபீடி, இதுல எங்கத்த Subscriptionக்குப் போறது என்ற என்போன்றவர்கள் கீழ்காணும் app களை deviceகளில் இன்ஸ்டால் செய்துகொள்ளலாம்.
1. Thop
TV
2. Oreo TV
3. Live TV
4. Unlockmytv (உலக சினிமா ரசிகர்களுக்காக)
5. Magic TV (இதுவும் உலக சினிமா ரசிகர்களுக்கானதே)
free IPL live tv apps for firestick and mobile [ Tamil ] |
மேல்சொன்ன appகள் .apk
fileகளாக இருத்தல்
அவசியம். அவ்ளோ தானே, இந்தா போறேன் சொசைட்டிக்கி என்று Google PlayStoreருக்கோ Amazon
Storeக்கோ சென்றால்
பொடணியிலேயே அடிச்சு வெளித்தள்ளிவிடுவது உறுதி.
என்னப்பா, வடைய பிக்கக்கூடாதுங்கிற, பிரிச்சுக்குடுக்கணும்ங்கிற, அண்ணன் தம்பி ரெண்டு பேருங்குற என்பவர்கள்
அதற்காகவே கடைவிரித்திருக்கும் கீழ்காணும் Website
களை நாடலாம்.
1. Apkmirror
2. Apkpure
3. Aptoide
உங்கள்
மொபைலில் இந்த சைட்களுக்கு சென்று appகளை டவுன்லோட் செய்து (மொபைல் மற்றும் டிவி ஒரே
WiFi connectionல் இருப்பின்) Apps2Fire
என்னும் app மூலம் நேரடியாக உங்கள் டிவிக்கே அனுப்பி இன்ஸ்டால் செய்துகொள்ளலாம்.
அங்கையெல்லாம் போகமுடியாதுப்பா என்று கூறும் என்போன்ற Energy Saver நபர்களுக்கு இந்த Apk பைல்களை கடைசியில் கொடுக்கிறேன்.
அவ்வளவு தான். இப்போது உலக உள்ளூர் தொடர்கள் சினிமாக்கள் என்று
எல்லாவற்றையும் HD தரத்தில் காட்ட உங்கள் டிவி தயாராகி விட்டது.
எழுதி வச்சுக்கோங்க. இந்த தரத்துல நிகழ்ச்சிகளை பார்த்துட்டு DTHகள் தரும் HD சேனல்களை பார்த்தாக்கூட 'த்த, ச்ச்சே, ப்பே' என்று தொரத்திவிடுவீர்கள்.
ஒப்பீட்டளவில் Thop, Oreo, Bee டிவி களுக்குள் சிறுசிறு மாறுதல்கள்
இருந்தாலும் இவை அனைத்தும் ஒரே algorithmமில் இயங்குபவை. அந்தந்தந்த நேரத்தில்
உலகத்தில் எந்த மூலையில் நடக்கும் Cricket/football
மேட்ச்கள், Apple Mi ஆஸ்கார் Eventகள் HD தரத்தில் liveவாக காணலாம்.
Singam Jasmine Whatstar என்று 80ரூவா லோக்கல் சரக்கிற்கு இஷ்டத்திற்கு பெயர்
இருப்பது போல இருந்தாலும் இவை அனைத்தும் Sun,
Vijay Zee Colors மற்றும் HBO Star Movies Action போன்ற இன்டர்நேஷனல் சேனல் களை காட்ட
பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டவை இதன் சர்வர்கள் சீனாவில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஆஃப்கள் மூலம் இப்பொழுது நடக்கும் IPL ( Live Match ) தொடர்களை நேரலையாக கண்டு ரசிக்கலாம்
free IPL live tv apps for firestick and mobile [ Tamil ] |
இந்த appகள் இருந்தால் Sunnext,
Prime, Zee5, SonyLiv, Netflix என்று எந்த Subscriptionம் தேவை இல்லை. Pirated MOD version தான், குற்றவுணர்ச்சி இல்லாமல் பார்க்க பழகவேண்டும்.
ஆனால் கண்டிப்பாக தமிழ்பாறைகள் அளவிற்கு ஆபத்தானது அல்ல.
மேல்சொன்ன appகளை எப்படி பயன்படுத்துவது, ஒவ்வொன்றிலும் இருக்கும் சாதக பாதகங்களை தனிப்பதிவா போட முயற்சிக்கிறேன்.
இந்த appகளை உங்க மொபைல் களிலும் install செய்து உபயோகிக்கலாம்.
ஆனா dataகளை சாவகாசமாக சம்மணமிட்டு சாப்பிடும்.
ஜாக்கிரதை. இதை பற்றி எந்த சந்தேகம்னாலும் தயங்காம கேளுங்க. தெரிஞ்சதை சொல்றேன்.
No comments