Header Ads

  • Latest News

    Google Pixel 4a Google' New Budget Smart Phone Tamil

    Google Pixel 4a Google' New Budget Smart Phone

    Google Pixel 4a

    பல வதந்திகளுக்கு பிறகு கூகிள் நிறுவனம் பட்ஜட் ஸ்மார்ட் போன் சந்தையில் இறங்கி விட்டது, இந்திய சந்தையில் பட்ஜெட் ஸ்மார்ட் போன்களுக்கு வரவேற்பு அதிகமாக இருப்பதால் பல நிறுவனங்கள் தங்களுடைய ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
     சமீபத்தில் ஒன்ப்ளஸ் நிறுவனமும் அதனுடைய பட்ஜெட் மொபைலான OnePlus NORD ஐ அறிமுகம் செய்தது.


    அந்த வரிசையில் கூகில் நிறுவனம் அமெரிக்காவில் அதனுடைய பட்ஜெட் போன் அன Google  Pixel 4a போனா அறிமுகப்படுத்திருக்காங்க. இந்தியாவில் இந்த போன் அக்டோபர் மாதம் வெளியாகும்னு கூகிள் தரப்பில் இருந்து சொல்லப்படுகிறது,
     இந்த போன்ல கூகிள் இப்படி பண்ணுவாங்கனு யாருமே எதிர்பாக்கல அப்படி ஏன்னா பண்ணுங்கனா இந்த வருஷம் விறபனைக்கு வந்த எல்லா மொபைல் போன்லயும் நாம குறைந்தது 3 கேமராவச்சும் பாத்துருப்போம்.

     ஆனா google அவுங்களோட pixel 4a போன்ல பின்புறம் வெறும் 12 மெகாபிக்ஸல் கொண்ட ஒரு கேமரா மடடும் தன கொடுத்திருக்காங்க.
     

    Google Pixel 4a
    Google Pixel 4a



    அப்படி இருந்தாலும் இப்பொழுது சந்தையில் உள்ள மற்ற Flagship போன்களில்  உள்ள அளவு தரமானதாக  இதன் புகைப்படங்கள் இருக்கும் என இப்பொழுது வரை வந்த Review மூலம் தெரிகிறது கூகிள் தரப்பில் இருந்தும் இதன் கேமரா சிறப்பம்சங்களை பற்றி கூறியிருப்பதன் மூலம் அறியப்படுகின்றது மேலும் இதில் Potrait போட்டோ எடுக்கும் வசதி, இரவில் போட்டோ எடுக்கும் வசதியான Night Sight வசதி, இரவில் வானத்தில் உள்ள நட்சத்திரங்களை புகைப்படம் எடுக்கும் வசதியும் தரப்பட்டடுள்ளதாக கூறியுள்ளது.

    Google Pixel 4a
    Google Pixel 4a

    Google Pixel 4a இது ஸ்னாப்ட்ரகன் ( Snapdragon 730G ப்ராசசருடன் வருகிறது இது எனக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான் ஏனென்றால் இந்தியாவில் இதனுடைய விலை இருபத்தைந்து ஆயிரத்திற்கு வருமென தெரிகிறது இந்த விலைக்கு  ஸ்னாப்ட்ராகன் 765G ப்ராசஸர் கொடுத்திருக்கலாம் இருந்தாலும் இதில் வரும் சாப்ட்வேர் இந்த குறையை சரி செய்யும் என Google  தெரிவித்திருக்கிறது, இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் வருகிறது 

    Google Pixel 4a 5.8" இன்ச் ஓ எல் ஈ டி ( OLED ) திரையுடன் வருகிறது இந்த ஸ்கிரீன் வலது ஓரத்தில் 8MP மெகா பிஸ்சல் கேமரா Punch Hole ல்  வருகிறது இத அவுங்க transmissive hole னு சொல்கிறார்கள். இந்த திரை HDR சப்போர்ட்டுடன் வருகிறது.

    Google Pixel 4a மொபைலில் 3140 mAh திறன் கொண்ட பேட்டரியுடன் வருகிறது இது ஒரு  முழு நாள் உபயோகதிர்ககு வரும் என கூகிள் தெரிவிக்கிறது. உபயோகித்து பார்த்தால் தான் தெரியும்.

    மேலும் இதில் உள்ள சிறப்பம்சங்களை பார்க்கலாம்.
      

    கூகிள் பிக்சல் 4a (Google Pixel 4a) சிறப்பம்சங்கள்

    • 5.81' இன்ச் முழு எச்.டி பிளஸ் கொண்ட 1080 X 2340 பிக்சல்கள் உடைய ஓல்இடி டிஸ்பிளே
    • எச்டிஆர் ஆதரவுடன்
    • குவால்காம் ஸ்னாப்டிராகன் 730G சிப்செட்
    • 6 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் 128 ஸ்டோரேஜ்
    • அண்ட்ராய்டு 10 இயங்குதளம்
    • 12MP பின்புற கேமரா மற்றும் எல்.ஈ.டி ஃப்ளாஷ்
    • 8MP முன்பாக செல்ஃபி கேமரா
    • 3.5 மிமீ ஆடியோ ஜாக்
    • 18W ஃபாஸ்ட் சார்ஜிங்
    • 3140 எம்ஏஎச் பேட்டரி

    கூகிள் பிக்சல் 4a விலை

    கூகிள் பிக்சல் 4a தற்பொழுது $ 349 டாலர் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் தோராயமாக ரூ.26,300 என்ற விலையில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய கூகிள் பிக்சல் 4a ஸ்மார்ட்போன் 6 ஜிபி + 128 ஜிபி கொண்ட ஒரே வேரியண்ட் மாடலாக மட்டுமே வருகிறது. தற்போது அமெரிக்காவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அக்டோபர் மாதத்திற்குள் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad