Header Ads

  • Latest News

    Themes For Android app HomeScreen setup using Nova launcher

     Home Screen Wallpaper Setup Guide in Tamil

    நம்மளுடைய மொபைல் போனில் வழக்கமாக எதாவது ஒரு வெப்சைட் ல் இருந்து நமக்கு பிடித்த புகைப்படங்களை டவுன்லோட் செய்து நம் மொபைலில் வால்பேப்பராக வைப்போம் இது நம்மில் அனைவரும் செய்வது. இது எப்பொழுதும் அனைவரது மொபைலிலும் ஒரே மாதிரி இருப்பதால் கொஞ்சம் சலிப்பாக இருக்கும் அப்ப நாம் Live Wallpaper பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்து வைப்போம் இதில் ஏதாச்சும் ஒரு அனிமேஷன் மட்டும் இருக்கும் இதுவும் கொஞ்ச காலத்தில் போர் அடிக்க ஆரம்பித்து விடும். அப்படி இருக்கும் பொழுது வித்தியாசமாக ஏதாச்சும் Themes அல்லது Wallpaper வைச்ச நல்ல இருக்கும்னு தோன்றும்  அப்படி நினைப்பவர்களுக்காக இந்த பதிவு 

    Themes For Android app HomeScreen setup using Nova launcher
    Themes For Android app HomeScreen setup using Nova launcher

    தேவையான ஆப்ஸ் 
     
    [ தேவையான அப்ளிகேஷன் டவுன்லோட் லிங்க் மற்றும் வீடியோ செயல்முறை கீழே கொடுக்கப்பட்டடுள்ளது ]
    KLWP அப்ளிகேஷன் பயன்படுத்தி HomeScreen தீம்ஸ் செட் செய்வதற்கு Nova Launcher அப்ளிகேஷன் சிறந்ததாகும் இதில் நமது விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி மாற்றி அமைக்க முடியும் 

    >>Nova Launcher Steup<<

     Nova Launcher அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து ஓபன் செய்யவும் அது கேட்கும் permission ஐ படித்து பார்த்துவிட்டு Allow செய்து கொள்ளவும்  

    1 முதலில் நாம் nova launcher அப்ளிகேஷனை ஓபன் செய்ய வேண்டும் நமது ஸ்கிரீனில் லாங் பிரஸ் செய்தால் Nova Launcher ன் செட்டிங் ஆப்ஷன் கிடைக்கும். அதில் உள்ளே நுழைந்தவுடன் நமது Nova Launcherdefault லாஞ்செர் ஆக வைக்க வேண்டும்.

    Themes For Android app HomeScreen setup using Nova launcher
    Themes For Android app HomeScreen setup using Nova launcher

    2 Nova Launcher செட்டிங் பக்கத்தில் உள்ள Home Screen ஆப்ஷனை செலக்ட் செய்து அதில் உள்ள Desktop Grid ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும் , அதில் உங்களது மொபைல் திரையின் அளவிற்கேற்ப தேர்ந்தெடுத்து கொள்ளவும் ( எனது மொபைல் Samsung S6 Edge எனவே நான் 6 X 5 தேர்ந்தெடுத்துள்ளேன் ) 

    3 Nova Launcher செட்டிங் பக்கத்தில் உள்ள Home Screen ஆப்ஷனை செலக்ட் செய்து அதில் உள்ள Dock ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும், அதில் உள்ள Enable ஆப்ஷனை off செய்யவும் 

    Themes For Android app HomeScreen setup using Nova launcher
    Themes For Android app HomeScreen setup using Nova launcher

    4 Nova Launcher செட்டிங் பக்கத்தில் உள்ள Home Screen ஆப்ஷனை செலக்ட் செய்து அதில் உள்ள Scroll ஆப்ஷனில் infinity scroll செலக்ட் செய்யவும் , அதன் கீழே இருக்கும் Page Indicator ஆப்ஷனை செலக்ட் செய்து அதில் None ஆப்ஷனை செலக்ட் செய்துகொள்ளவும்.

    Themes For Android app HomeScreen setup using Nova launcher
    Themes For Android app HomeScreen setup using Nova launcher

    5  நமது மொபைலின் Home Screen ல் ஒரு Blank Page create செய்து விட்டு மற்ற பக்கங்களை Remove செய்து விடவும். Nova Launcher அப்ளிகேஷனில் செய்யவேண்டிய வேலைகள் முடிந்தது. 

      இப்பொழுது KLWP அப்ளிகேஷனில் செய்ய வேண்டிய செட்டிங்குகளை பார்க்கலாம் 

    >> KLWP Setup <<

    KLWP அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து open செய்யவும் அது கேட்கும் permission ஐ படித்து பார்த்துவிட்டு Allow செய்து கொள்ளவும் 

    1 KLWP  அப்ளிகேஷனில் இடது ஓரத்தில் உள்ள மெனுவை செலக்ட் செய்யவும் அதில் Installed ஐ செலக்ட் செய்யவும் அதில் நாம் ஏற்கனவே இன்ஸ்டால் செய்துவைத்திருந்த theme பேக் Glass Pane ஐ  செலக்ட் செய்து கொள்ளவும், இப்பொழுது Notification Error அலார்ட் காட்டும் அதில் Fix ஆப்ஷனை செலக்ட் செய்து Notification access Permission கொடுக்கவும் 

    Themes For Android app HomeScreen setup using Nova launcher
    Themes For Android app HomeScreen setup using Nova launcher

      2 KLWP அப்ளிகேஷனில் Glass Pane தீமின் ப்ரீவியூ தெரியும் அதில் நாம் ஒரு சில மாற்றங்கள் செய்ய வேண்டும், அதில் உள்ள Facebook ஐகான் மீது டச் செய்தல் App Launch என்று Popup box திரையில் தெரியும் அதில் உள்ள Edit ஐ கிளிக் செய்தால் நமது மொபைலில் உள்ள அனைத்து அப்ளிகேஷன்களும் காட்டப்படும் அதில் Facebook அப்ளிகேஷனை செலக்ட் செய்துகொள்ளவும்.

    Themes For Android app HomeScreen setup using Nova launcher
    Themes For Android app HomeScreen setup using Nova launcher

    3 அதில் காட்டப்படும் ஐகான்களுக்கு தகுந்தாற்போல் ஒவ்வொரு அப்ளிகேஷனையும் Edit செய்துக்கொள்ளவும்.  

     4 அனைத்து மாற்றங்களும் செய்து முடித்ததும் Save ஐகானை கிளிக் செய்து save செய்யவேண்டும் fix wallpaper popup செய்தி வரும் அதில் fix ஆப்ஷனை செலக்ட் செய்து HomeScreen wallpaper ஆக செட் செய்துகொள்ளவும் 

    Themes For Android app HomeScreen setup using Nova launcher
    Themes For Android app HomeScreen setup using Nova launcher

    இதில் நாம் பயன்படுத்தும் தீமை KLWP pro version ல் மட்டுமே பயன்படுத்த முடியும் இந்த அப்ளிகேஷன்களை கீழே உள்ள லிங்க்கில் கொடுக்கிறேன் டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள் 
     
    You have to wait 15 seconds.

    வீடியோ வழிமுறை 

    2 comments:

    Post Top Ad

    Post Bottom Ad