Friday, April 4.

Header Ads

  • Latest News

    Whatsapp Tips and Tricks

    whatsapp tips and tricks



    இன்றைய நவீன காலத்தில் அனைவரது கைகளிலும் ஸ்மார்ட் போன் இன்றியமையாத ஒன்றாகி விட்டது . அதிலும் வாட்ஸ்ஆஃப்(whatsapp ) இல்லாத ஸ்மார்ட் போனே இல்லை. உலகெங்கிலும் உள்ள ஏராளமான மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு இன்ஸ்டன்ட் மெசேஜ்ஜிங் ஆப்ஸ் என்றால் அது வாட்ஸ்அப் தான். எனவேதான் whatsapp பல புதிய அம்சங்களை அதன் பயனாளர்களுக்கு வழங்கி வருகிறது அதில் சில வசதிகளை இந்த பதிவில் பார்க்கலாம் .


    secret chat lock

    உலகெங்கிலும் உள்ள ஏராளமான மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு இன்ஸ்டன்ட் மெசேஜ்ஜிங் ஆப்ஸ் என்றால் அது வாட்ஸ்அப் தான்.இதில் உங்கள் தனிப்பட்ட மெசேஜ் மற்றும் அலுவலக மெசேஜ் என எல்லாவற்றிற்கும் வாட்ஸ்ஆப் தான் பயன்படுத்துகின்றனர் 
    இது பல கோடி பயனர்களுக்கு சிக்கலாக இருந்து வந்தது. இந்த சிக்கலை சரி செய்யும் விதமாக சமீபத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் பிரத்தியேகமான வாட்ஸ்அப் சாட் லாக் அம்சத்தை அறிமுகம் செய்தது. இந்த வாட்ஸ்அப் சாட் லாக் அம்சம் இருப்பது பற்றி இன்னும் பல வாட்ஸ்அப் பயனர்களுக்கு தெரியவில்லை என்பதனால், இப்போது இந்த தகவலை உங்களுடன் மீண்டும் பகிர்ந்துகொள்கிறோம்.

     உங்கள் வாட்ஸ்அப் சாட்களில் நீங்கள் எந்த சாட்டை, வாட்ஸ்அப் சாட் பாக்சில் இருந்து மறைக்க விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள். பிறகு, உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் வாட்ஸ்அப் ஓபன் செய்து, நீங்கள் ஹைடு அல்லது மறைக்க விரும்பும் சாட்டை தேர்வு செய்துகொள்ளுங்கள். 
    Pic 1
    பிறகு, மறைக்க விரும்பும் அந்த சாட்டை லாங் பிரஸ் செய்து, உங்கள் டிஸ்ப்ளேவின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளி ஐகானை கிளிக் செய்யவும்.  

    Pic 2  

    பின்வரும் விருப்பங்களிலிருந்து, "லாக் சாட் (Lock Chat)" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், 'இந்த சாட்டை லாக் செய்து ஹைடு செய்யவும்' என்று ஒரு அறிவிப்பு தோன்றும். "Continue" என்பதை கிளிக் செய்தால்,


     தேர்ந்தெடுக்கப்பட்ட சாட் லாக் செய்யப்பட்டு, சாட் பாக்சில் இருந்து ஹைடு செய்யப்பட்டு மறைத்து வைக்கப்படும். இதை ஓபன் செய்ய வேண்டும் என்றால், உங்கள் போனில் பயோமெட்ரிக் அங்கீகாரம் மூலம் மட்டுமே அணுக முடியும். அல்லது போனுடன் இணைக்கப்பட்ட முக அங்கீகாரத்தை வைத்து திறக்க முடியும். இப்படி லாக் செய்யப்பட்ட சாட்களை மூன்றாம் நபர்கள் யாரும் ஓபன் செய்யவே முடியாது. உங்கள் போனில் நீங்கள் பதிவு செய்து வைத்திருக்கும் பிங்கர்பிரிண்ட் மற்றும் பேஸ் அன்லாக் பதிவு அடையாளங்களை மட்டுமே வைத்து திறக்க முடியும். இதன் மூலம் உங்கள் பர்சனல் வாட்ஸ்அப் சாட் முழுமையாக பாதுகாக்கப்படுகிறது. ஹைடு செய்யப்பட்ட வாட்ஸ்அப் சாட்டை Unhide chat என்ற விருப்பத்தின் மூலம் பழைய நிலைக்கு கொண்டுவரலாம்.  


    Secret code 

     இதில் இன்னொரு வசதியும் உள்ளது நாம் லாக் செய்த சாட் நம்மளுடைய சாட் லிஸ்டில் காட்டும் அதை மறைக்க lockcode என்னும் வசதியை whatsapp கொடுத்துள்ளது அதை எப்படி செய்வது என பார்ப்போம்.



    whatsapp tips and tricks


     நாம் லாக் செய்த சாட் ஐ பின்கேர்ப்ரின்ட் (fingerprint ) மூலம் ஓபன் செய்து கொள்ளவும் பின் வலதுபுற இருக்கும் 3டாட் ஐ கிளிக் செய்யவும். அதில் secret code என்ற வசதி off  செய்யப்பட்டிருக்கும் அதை on செய்து கொள்ளவும், மற்றும் Hide locked chats எனும் வசதியை on செய்துகொள்ளவும்

     



    இந்த படத்தில் கட்டுவது போல் Create Secret code கிரியேட் செகிரெட் கோட் எனும் ஆப்ஷன் ஐ  தேர்ந்தெடுக்கவும் 



    பின்பு இந்த படத்தில் காட்டுவது போல் பாக்ஸில் உங்களுக்கு பிடித்த கோட் ஐ  டைப் செய்துகொள்ளவும் நான் lockchat என டைப் செய்துளேன் .



    இனி உங்கள் வாட்சப் சாட் சர்ச் பாக்ஸில் நீங்கள் வைத்த secret code  டைப் செய்தால் மட்டுமே நீங்கள் மறைத்த சாட் காட்டும் .

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad